இது மனநல மருத்துவம் சார்ந்த பாடமாகும். இந்த பாடத்தின் நோக்கம் (objectives) ஸ்கின்னர் அவர்களின் மனித மனநல மருத்துவதிற்கான பங்களிப்புகள் பற்றி அறிவதாகும். இந்தப் பாடத்தை மருத்துவ மாணவி கமலிகா ஸ்ரீ, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி உருவாக்கியுள்ளார். VIDEO
இணைப்பின் மூலமாக இந்தக் காணொளியைக் காண முடியும்.
முதலில், ஸ்கின்னர் பற்றிய அறிமுகம் அவசியம் (0:20), இவர் அமெரிக்க நாட்டை சேர்ந்த உளவியலாளர். நடத்தவாதம் மீதான தாக்கத்திற்கு பெயர் பெற்றவர். இவரது முக்கிய கண்டுபிடுப்புகள் நடத்தை மாற்றம், பதட்ட மேலாண்மை மற்றும் நேர்மறை வலுவூட்டலில் மையமாக உள்ளன. இவரது, மனநல மருத்துவத்திற்கான பங்களிப்புகள் பொதுவாக இரண்டு, ஸ்கின்னர் பெட்டியின் கண்டுபிடிப்பு மற்றும் செயல்பாட்டு கற்றல் கோட்பாடு ஆகும் (operant conditioning theory) (0:46).
ஸ்கின்னர் பெட்டி – இதன் மற்றொரு பெயர் இயக்க கண்டிஷனிங் அறை. ஒரு விலங்கின் நடத்தையை படிக்க உதவும் ஒரு கருவி ஆகும். இந்த பெட்டியில் ஒரு விலங்கு, பொதுவாக எலி அல்லது புறா வைக்க படுகிறது. இதன் பகுதிகள் ஒரு நெம்புகோல், ஒலி மற்றும் ஒளி கருவிகள், உணவு வழங்கும் கருவி மற்றும் மின்சார கம்பிகள்.
இந்த விலங்கு ஒரு செயலை சரியாக செய்தால் அதற்கு ஒரு வெகுமதி கிடைத்து நேர்மறை வலுவூட்டல் (positive reinforcement) பெறுகிறது. சில நேரங்களில் இந்த விலங்கு செயலை தவராக செய்தால், அதற்கு நேர்மறை தண்டனை கிடைக்கிறது. இந்த பெட்டியில் உள்ள விலங்கு ஒரு செயலை செய்ய கற்று கொள்ள வேண்டும். அந்த செயல் ஒரு நெம்புகோலை செயல்படுத்துவதாகவோ அல்லது ஒலி மற்றும் ஒளிக்கு பதில் அளிப்பதாக இருக்கலாம். விலங்கு அச்செயலை சரியாக செய்தால் வெகுமதி கிடைக்கிறது. இப்படி ஒரு செயலை தொடர்ந்து ஒரு வெகுமதி கொடுக்கப்பட்டால், அந்த செயல் மீண்டும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஸ்கின்னர் கூறியுள்ளார். ஒரு செயலை தவறாக செய்தால் அதற்கு தண்டனை அளிக்கப்பட்டு அந்த செயல் மீண்டும் நடக்கும் வாய்பு குறைகிறது என்றும் கூறியுள்ளார் (1:00).
செயல்பாட்டு கற்றல் விதி – ஸ்கின்னரை பொருத்த வரை நடத்தை மூன்று காரணிகளால் பாதிகப்படுகிறது. அவை தூண்டுதல் (stimulus), பதில் (response) மற்றும் விளைவு (consequence) ஆகும். நடத்தை அது உருவாக்கும் விளைவுகளால் வலுபடுத்தப்படுகிறது அல்லது பலவீனப்படுத்தப்படுகிறது (2.45)
வலுவூட்டல் – வலுவூட்டல் ஒரு செயல் மீண்டும் நிகழ்வதற்கான வாய்பை அதிகப்படுத்துகிறது. அதன் நன்மைகள் அந்த செயல் செய்வதற்கான உந்துதல் மற்றும் நிலத்தன்மை உருவாதல் ஆகும் (03:30)
நேர்மறை வலுவூட்டல் – ஒரு நடத்தையை ஊகுவிக்க இனிமையான ஒன்றை சேர்தல். உதாரணமாக தேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ஆசிரியர் பரிசு கொடுப்பது. மாணவர்கள் அந்த பரிசை பெறுவதற்காகவாவது படித்து முதலிடம் பிடிக்க முயல்வார்கள். இதன் மூலமாக படிப்பு என்ற நடத்தை ஊகுவிக்க படுகிறது (04:13)
எதிர்மறை வலுவூட்டல் – ஒரு நடத்தையை ஊகுவிக்க விரும்பதகாத ஒன்றை சேர்த்தல். உதாரணம் தேர்வு நேரங்களில் குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க தடை விதிக்கும் பெற்றோர்கள். தேர்வில் படிப்பதற்கு விரும்பதகாத ஒன்றாக இருக்கும் அந்த தொலைக்காட்சியை பார்க்க தடை விதப்பதால் படிப்பு என்ற நடத்தை மேம்படுத்தப்படுகிறது (05:32)
நேர்மறை தண்டனை – ஒரு நடத்தையை ஊகுவிக்க விரும்பத்காத ஒன்றை சேர்ப்பது. உதாரணமாக சூடான பாத்திரத்தை தொட வேண்டாம் என்று அறிவுரித்தியும் அதை தொட்டு விரும்பதகாத தீக்காயம் அடைதல் (06:10). எதிர்மறை தண்டனை – ஒரு நடத்தையை ஊகப்படுத்த விரும்பத்தக்க ஒன்றை நீக்குதல். உதாரணம் ஒரு குழந்தை அழுகும் போது அதன் கையில் இருந்த அதற்கு விரும்பத்தக்க அந்த ஒரு பொம்மையை எடுத்து செல்வது (06:47)
ஸ்கின்னரின் பரிசோதனை மனிதகுலத்திற்கு எவ்வாறு பொருத்தமானது ? முதலாக வகுப்பறை மேலாண்மை மற்றும் ஒழுக்கம். ஒரு வகுப்பறையில் சில மாணவர்கள் நன்றாக படிப்பார்கள் ஆனால் சிலர் சற்று மெதுவாக தான் படிப்பார்கள் அல்லது ஆசிரியர் சொல்லும் வேலைகளை செய்யாமல் இருபார்கள். ஆசிரியர் சொல்பேச்சு கேட்டு நடக்கும் மாணவர்களுக்கு நேர்மறை வலுவூட்டல் மூலமாக பாராட்டுகள் கொடுத்தால் அந்த மாணவர்கள் மேலும் நன்றாக நடத்தையை பின்பற்றுவர் (07:14)
இரண்டாவதாக கற்றல் மற்றும் திறன் வடிவமைத்தல். இதில் ஒரு பெரிய செயல் பல சிறிய சிறிய செயல்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு செயலுக்கு பின்னும் பின்னூட்டங்கள் அளிக்கப்படுகின்றன. இது மூலமாக நடத்தை வலுபடுத்தப்படுகிறது. மூன்றாவதாக கல்வி தொழில்நுட்பம், தகவமைப்பு கற்றல் மற்றும் ஆன்லைன் தளங்கள். டிஜிட்டல் கற்றல் தளங்கள் மாணவர்களுக்கு ஊகப்படுத்த பேட்ஜ்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் உடனடி பின்னூட்டம் கொடுக்கின்றன. தகவமைப்பு கற்றல் தளங்கள் கற்பவரின் பதில்களை அடிபடையாக கொண்டு நிலைகளை சரிசெய்கின்றன. முடிவாக ஸ்கின்னரின் மனித மனநல மருத்துவதிற்கான பங்களிப்புகள் மனிதநேயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன.
Add your first comment to this post
You must be logged in to post a comment.